சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகள் பதிவு


சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 21 Dec 2021 2:24 PM IST (Updated: 21 Dec 2021 2:24 PM IST)
t-max-icont-min-icon

சிவசங்கர் பாபா மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேலும் 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் அமைந்திருக்கும் சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அந்த பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்தனர். 

இதையடுத்து அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு போக்சோ வழக்குகளும், ஒரு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதில் 2 வழக்குகளுக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது மேலும் பாதிக்கப்பட்ட, அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் சிவசங்கர் பாபா மீது இதுவரை 8 போக்சோ வழக்குகள், ஒரு பெண் வன்கொடுமை வழக்கு என மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Next Story