புதுவையில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


புதுவையில்  இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 21 Dec 2021 10:17 PM IST (Updated: 21 Dec 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் இன் று 2 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 20 பேருக்கு தொற்று உறுதியானது.

புதுச்சேரி
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 20 பேருக்கு தொற்று உறுதியானது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 33 பேர், வீடுகளில் 99 பேர் என 132 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.  19 பேர் குணமடைந்தனர்.
புதுவையில் தொற்று பரவல் 0.74 சதவீதமாகவும், குணமடைவது 98.48 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 3 ஆயிரத்து 7 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 3 ஆயிரத்து 806 பேரும் போட்டுக்கொண்டனர். இதுவரை 13 லட்சத்து 52 ஆயிரத்து 6 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
==

Next Story