அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் மதுரை-சார்ஜா இடையே விமான சேவை


அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் மதுரை-சார்ஜா இடையே விமான சேவை
x
தினத்தந்தி 22 Dec 2021 4:55 AM IST (Updated: 22 Dec 2021 4:55 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் மதுரை-சார்ஜா இடையே விமான சேவை தொடங்க உள்ளது.

மதுரை,

கொரோனா ஊரடங்கிற்கு பின் தற்போது மதுரையிலிருந்து இலங்கை, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) 8-ந்தேதி முதல் மதுரையிலிருந்து ஐக்கிய அரபு அமீரக நகரங்களில் ஒன்றான சார்ஜாவிற்கு நேரடியாக பயணிகள் விமான சேவை தொடங்க உள்ளது. 

அதன்படி வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய தினங்களில் மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 3.30 மணிக்கு சார்ஜா சென்றடையும். இதேபோல செவ்வாய், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் சார்ஜாவிலிருந்து அதிகாலை 2.15 மணிக்கு புறப்பட்டு, காலை 7.50 மணிக்கு மதுரை வந்தடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story