சத்துணவில் சுவை இல்லை - எச்சரித்த மாவட்ட ஆட்சியர்
சத்துணவில் சுவை இல்லை, உணவு சரியாக சமைக்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் சமையலர்களை எச்சரித்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த எட்டிவாடி அரசு உயர்நிலை பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது அங்குள்ள நடுநிலை பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தில் சத்துணவை சாப்பிட்டு பார்த்தார். உணவு சரியாக சமைக்கப்படவில்லை எனவும் உணவில் சுவை இல்லை எனவும் அவர் அங்குள்ள சமையலர்களை எச்சரித்தார்.
அதை தொடர்ந்து அங்குள்ள நியாயவிலைக்கு கடைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அங்கும் சோதனை நடத்தினார். இந்த மாதம் நுகர்வோர்களுக்கு வழங்கபட்ட பொருள்களின் விபரம் குறித்தும் , நியாயவிலைக்கடையில் உள்ள இருப்பு பொருள்கள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story