கோவில், தேவாலயங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
கோவில், தேவாலயங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.
புதுச்சேரி
கோவில், தேவாலயங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.
கலந்துரையாடல் கூட்டம்
புதிய வகை கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக முதலியார்பேட்டை காவல் சரகத்துக்கு உட்பட்ட கோவில்கள், தேவாலயங்கள் நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு இளவரசன் பேசியதாவது:-
கொரோனா நெறிமுறைகள்
கோவில்கள், தேவாலயங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும், பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணியவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்க ஆலய வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தவேண்டும். சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் குறித்து காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story