தடுப்பூசி போடாதவர்கள் புதுவை சட்டசபைக்குள் வர தடை
தடுப்பூசி போடாதவர்கள் புதுவை சட்டசபைக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி
தடுப்பூசி போடாதவர்கள் புதுவை சட்டசபைக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி கட்டாயம்
பல்வேறு தகவல் மற்றும் பணிகளுக்காக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை சந்திக்க புதுவை சட்டசபைக்கு நாள்தோறும் ஏராளமானவர்கள் வருகின்றனர்.
தற்போது கொரோனா 100 சதவீத தடுப்பூசியை எட்டும் இலக்கில் அரசின் செயல்பாடு இருப்பதால் சட்டசபைக்குள் செல்வதற்கும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி சட்டசபைக்கு வருபவர்களிடம் அங்கு பணியில் உள்ள சுகாதார ஊழியர்கள் கொரோனா சான்றிதழ் உள்ளதா? என்று கேட்டு அதன்பிறகே அனுமதித்து வருகின்றனர்.
சான்றிதழ் இல்லாமல் வருபவர்களிடம் அவர்கள் ஊசி போட்டுள்ளார்களா? என்பதை அறிய செல்போன் எண்ணை வைத்து ஊசி போட்டுள்ளதை தெரிந்துகொண்டு சட்டசபைக்குள் அனுமதிக்கிறார்கள்.
அனுமதி மறுப்பு
தடுப்பூசி போடாதவர்களை சட்டசபைக்குள் செல்ல அனுமதி மறுத்து இதுவரை ஊசி போடாதவர்களை அங்கேயே ஊசிபோடுமாறு அறிவுறுத்துகிறார்கள். அதேபோல் 2-வது தவணைக்கான கெடு முடிந்த நிலையிலும் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. சுகாதார ஊழியர்களின் அதிரடி நடவடிக்கையால் புதுவை சட்டசபை வளாகத்தில் நேற்று பரபரப்பு நிலவியது. சட்டசபை வளாகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியினை சபாநாயகர் செல்வம் ஆய்வு செய்தார்.
==
Related Tags :
Next Story