பொங்கல் பண்டிகை; தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது
பொங்கல் பண்டிகையொட்டி தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
சென்னை,
தமிழகத்தில் வருகிற ஜனவரி 14ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தைப் பொங்கல் திருநாள் கொண்டாடப்படவுள்ளது. அடுத்த நாள் 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 16ஆம் தேதி உழவர் திருநாள் தினம் என தொடர்ந்து மூன்று நாட்களாகும். எனவே சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தினர் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட திட்டமிட்டு உள்ளனர்.
எனவே தென் மாவட்ட ரெயில்களில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத்தீர்ந்துள்ளன. காத்திருப்போர் பட்டியலும் நீளுகிறது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட தென் மாவட்டங்களுக்கு தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘பொங்கல் பண்டிகை சிறப்பு ரெயில்கள் அட்டவணை தயார் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும்’ என்று கூறினார்.
Related Tags :
Next Story