சிறுமி மரணம் வழக்கு - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
திண்டுக்கல் பாச்சலூரில் மர்மமான முறையில் இறந்த சிறுமி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியை அடுத்த தாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ் என்பவரின் 9 வயது மகள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த புதன்கிழமை பள்ளிக்கு சென்ற சிறுமி, அதன்பிறகு காணவில்லை என கூறப்பட்டது.
இதையடுத்து, சிறுமியின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் சிறுமி கண்டுபிடிக்கவில்லை. இந்த நிலையில் பள்ளி வளாகத்திலேயே உடல் எறிந்த நிலையில், அந்த சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேக மரணம் என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த சமயத்தில் சிறுமி மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை
சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பள்ளி அருகே தீயில் கருகி இறந்து கிடந்த சிறுமி வழக்கில் மர்மம் நீடிக்கும் நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story