சென்னை,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. 12 நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 18,129 பேரில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.57 பேரில் 34 பேர் முடிவு தெரியவந்துள்ளது. 23 பேருக்கு மாதிரிகள் இன்னும் வர வேண்டியுள்ளது.33 பேரில் இரண்டு பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை. மற்ற 31 பேரும் 2 தவணை தடுப்பூசியும் போட்டு உள்ளனர்.ஒமைக்ரான் உறுதியான 34 பேரில் 30 பேர் வெளிநாடு ஒருவர் கேரளாவில் இருந்து தமிழகம் வந்தவர்கள் ஆவார். ஒமைக்ரான் உறுதியாகி உள்ள 33 பேருக்கும் லேசான அறிகுறிகள் தான் உள்ளன. தலை சுற்றல் போன்ற சிறு சிறு பாதிப்புகள் மட்டுமே உள்ளது.தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் சிகிச்சையில் இருக்கின்றனர். விமான நிலையங்களில் கண்காணிக்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.சென்னையில் 26, மதுரையில் 4, திருவண்ணாமலையில் 2 சேலத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டியத்தில் 65, டெல்லியில் 64, தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகி உள்ளது.