'மீண்டும் மஞ்சப்பை' இயக்கத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 Dec 2021 10:58 AM IST (Updated: 23 Dec 2021 12:45 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மஞ்சப்பை இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை, 

ஒரு பிளாஸ்டிக் பை மக்களால் சராசரியாக பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே, ஆனால், அவை மட்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள் ஆகும். அதிகப்படியான இந்த பிளாஸ்டிக் மாசுபாட்டினால் நமது பூமி தீவிரமாக பாதிப்படைந்துள்ளது. மேலும், கடல்வாழ் உயிரினங்கள் உள்பட நமது சுற்றுச்சூழல் அமைப்பில் பேரழிவையும் மற்றும் நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளையும் இந்த பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்படுத்தி வருகிறது.

இதனை கருத்தில்கொன்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா பரவும் சூழல் கருதி தடையை நடைமுறைப்படுத்தும் வகையில் தேக்கம் ஏற்பட்டது. தற்போதைய தமிழக அரசு இந்த தடையை மீண்டும் நடைமுறைப்படுத்த மிகவும் தீவிரமாக பணிகளைத் தொடங்கியுள்ளது. பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வையும், அதற்கு மாற்றான துணிப்பைகளையும் நாமே உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதே “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரையின் நோக்கம்.

தமிழக அரசின் “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரைக்கான நிகழ்ச்சி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில்  கலைவாணர் அரங்கில் 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பிளாஸ்டிக் பைகளை புறக்கணித்து துணிப்பைகளின் பயன்பாட்டை ஊக்கப்படுத்த விழிப்புணர்வு இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது. 

பிளாஸ்டிக் மாசுபாட்டை தடுக்க சுற்றுச்சூழல் துறை சார்பில் ஏற்பாடு செய்துள்ளது. 

Next Story