பனிப்பொழிவு எதிரொலி; 2 ஆயிரம் ரூபாயை தாண்டிய மல்லிகைப்பூ விலை
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகையின் விலை 2 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், கொத்தமங்கலம், ராஜன் நகர் உள்ளிட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகைப்பூ பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளது. வழக்கமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு 15 டன் வரை மல்லிகை பூக்களை விவசாயிகள் கொண்டு வரும் நிலையில் தற்போது ஒரு டன்னுக்கும் குறைவான பூக்களையே விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதனால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,600 முதல் ரூ.2.117 வரை விற்பனை ஆகிறது. இதே போல் முல்லை ஒரு கிலோ 1,120 ரூபாய்க்கும், கனகாம்பரம் 900 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
Related Tags :
Next Story