9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய அ.தி.மு.க. பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது


9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய அ.தி.மு.க. பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 23 Dec 2021 11:44 PM IST (Updated: 23 Dec 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய அ.தி.மு.க. பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 58). இவர், விளாங்காடுபாக்கம் கிளை அ.தி.மு.க. நிர்வாகியாக உள்ளார். இவர், 9-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, தனது ஆசைக்கு இணங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த மாணவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், இதுபற்றி மாதவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணகி வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story