டெல்லி எக்ஸ்பிரசில்: மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து பயணிகளிடம் கைவரிசை வடமாநில வாலிபர் கைது
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரெயில் பயணிகளிடம் செல்போன்- பணம் பறித்து சென்ற வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை சென்டிரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:12615) ரெயிலில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நீதேஷ்குமார் யோகி (வயது 19) மற்றும் அவரது சகோதரர் லோகேஷ் குமார் யோகி (22) ஆகியோர் பயணம் செய்தனர். அவர்கள் இருந்த டி2 பெட்டியில் 35 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவரும் இருந்துள்ளார்.
ரெயில் கிளம்பியதும் அந்த நபர் நீதேஷ்குமார் மற்றும் லோகேஷ் குமாரிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். வெகுநேரமாக 3 பேரும் ரெயில் பேசி கொண்டே வந்தனர். இந்த நிலையில் ரெயில் கூடூர்-நெல்லூர் இடையே சென்று கொண்டிருக்கும் போது அந்த நபர் கொடுத்த குளிர்பானத்தை இருவரும் வாங்கி குடித்துள்ளனர். குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர்.
வடமாநில வாலிபர் கைது
ரெயில் நாக்பூர் அருகே வரும்போது, இருவரும் கண்விழித்து பார்த்தனர். அப்போது தான் அந்த மர்ம நபர் தங்களுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தங்களது பணம் மற்றும் செல்போனை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து நாக்பூர் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர்.
நாக்பூர் ரெயில்வே போலீசார், சென்னை சென்டிரல் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் உதவியுடன் விசாரணை நடத்தினர். இதையடுத்து சென்டிரல் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரோகித்குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் குற்றவாளியை தேடினர்.
இந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட நபர் நேற்று சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் டெல்லி செல்லும் ஜி.டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி உட்கார்ந்திருந்தார். இதைக்கண்ட போலீசார் அவரை உடனடியாக கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் (28) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்த 7 செல்போன்கள், 4 ஆயிரம் ரூபாய் பணம், 150 மயக்க மாத்திரைகள் முதலியவற்றை பறிமுதல் செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story