திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம் காக்க சூளுரைப்போம் - மு.க.ஸ்டாலின்
தந்தை பெரியாரின் நினைவு நாளில், ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சிகளை வெல்வோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தந்தை பெரியாரின் 48ஆவது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை சிம்சனில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில்,
ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியைத் தட்டியெழுப்பி, சுயமரியாதை ஒன்றே அடிமை விலங்கைத் தகர்த்தெறியும் வழி எனத் தொண்டாற்றிய தந்தை பெரியாரின் நினைவுநாளில், ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சிகளை வென்று - திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம் காக்கச் சூளுரைப்போம் என பதிவிட்டுள்ளார்.
ஈராயிரம் ஆண்டுகள் அடக்கப்பட்ட இனத்தின் மான உணர்ச்சியைத் தட்டியெழுப்பி, சுயமரியாதை ஒன்றே அடிமை விலங்கைத் தகர்த்தெறியும் வழி எனத் தொண்டாற்றிய தந்தை பெரியாரின் நினைவுநாளில், ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சிகளை வென்று - திராவிடக் கொள்கைகள் கொண்டு தமிழர் மானம் காக்கச் சூளுரைப்போம்! pic.twitter.com/GFkH7v9mJK
— M.K.Stalin (@mkstalin) December 24, 2021
Related Tags :
Next Story