எம்.ஜி.ஆரின் 34ஆவது நினைவு தினம் - ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை


எம்.ஜி.ஆரின் 34ஆவது நினைவு தினம் - ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை
x
தினத்தந்தி 24 Dec 2021 10:41 AM IST (Updated: 24 Dec 2021 10:51 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆரின் 34ஆவது நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை,

அதிமுகவின் நிறுவனரும், தமிழக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான  எம்ஜிஆரின் 34-வது நினைவு தினம் இன்று (டிச. 24) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும்  எம்ஜிஆரின் 34-வது  நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 

இந்தநிலையில்,  எம்.ஜி.ஆரின் 34ஆவது நினைவு தினத்தையொட்டி  மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

Next Story