மலையாள பட இயக்குநர் சேதுமாதவன் மறைவு - கமல்ஹாசன் இரங்கல்
நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள் என சேதுமாதவன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
திரைப்பட இயக்குனர் கே. எஸ். சேதுமாதவன் வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90.மலையாள இயக்குனரான இவர், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிறமொழி படங்களையும் இயக்கியுள்ளார். நடிகர் கமல்ஹாசனை மலையாள திரைப்பட உலகில் அறிமுகப்படுத்திவர்
இயக்குனர் கே.எஸ். சேதுமாதவன். நாளை நமதே உள்ளிட்ட 75 படங்களை இயக்கியுள்ளார். சிறந்த திரைப்படங்களை இயக்கியதற்காக தேசிய விருது, பிலிம் பேர் விருது, நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.கே. எஸ். சேதுமாதவன் அவர்களின் உடல் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மலையாள பட இயக்குநர் சேதுமாதவன் மறைவுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள் என பதிவிட்டுள்ளார்.
காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள். pic.twitter.com/CXPcyVuMDA
— Kamal Haasan (@ikamalhaasan) December 24, 2021
Related Tags :
Next Story