மாணவர் சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை அமைச்சர் நமச்சிவாயம்


மாணவர் சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை  அமைச்சர் நமச்சிவாயம்
x
தினத்தந்தி 24 Dec 2021 9:48 PM IST (Updated: 24 Dec 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

மாணவர் சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

புதுச்சேரி
மாணவர் சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்  நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறப்பு பஸ்கள்

புதுவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு பணிகளை பா.ஜ.க. சார்பில் செய்தோம். பரிசுகளும் வழங்கி தடுப்பூசிகள் போடுவதை ஊக்கப்படுத்தினோம். 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுவையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நாங்கள் அடிக்கடி டெல்லி சென்று மத்திய மந்திரிகளை சந்தித்து மாநில வளர்ச்சிக்கு தேவையானவற்றை செய்து வருகிறோம். முதல்-அமைச்சர் டெல்லி செல்லாதது குறித்து நாங்கள் பதில் கூற முடியாது. டெல்லி செல்வது பற்றி முதல்-அமைச்சர் தான் முடிவு செய்வார்.
மாணவர்களுக்கான சிறப்பு பஸ்களை இயக்கவும், மதிய உணவு வழங்கவும் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். அட்சய பாத்ரா திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Next Story