‘அ.தி.மு.க.வை யாரும் அழிக்க முடியாது' முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
மு.க.ஸ்டாலின் உள்பட யார் நினைத்தாலும், அ.தி.மு.க.வையோ, எம்.ஜி.ஆரையோ அழித்துவிட முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
எம்.ஜி.ஆர். மறையவில்லை. மக்கள் மனதில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட யார் நினைத்தாலும் அ.தி.மு.க.வையோ, எம்.ஜி.ஆரையோ அழிக்க முடியாது.
தி.மு.க.வை பொறுத்தவரை எதிர்க்கட்சிகளின் ஜனநாயக குரல்வளையை நெறிக்கும் ஒரு கட்சி. ஆட்சியில் இல்லாதபோது எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள். ஆனால், அவர்கள் மீதான விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு ஒரு பலவீனமானவர்கள் என்று சொன்னால் அது தி.மு.க.வினர் தான்.
சட்டம்-ஒழுங்கு
தற்போது, தாக்குதல், வன்முறை அரசியலை தி.மு.க.வினர் கையில் எடுத்துள்ளனர். இப்படியே சென்றால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேலிகூத்தாகிவிடும். எங்கு பார்த்தாலும் வெட்டு-குத்து, அடிதடி, ரவுடியிசம்தான் உள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் அமைதியை நிலைநாட்டி மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவது தான் ஒரு அரசின் கடமை.
பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது. அதனை அரசு கட்டுப்படுத்த முடியவில்லை. அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. அதனை பொருத்துக்கொள்ள முடியாமல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவு
இதனை எதிர்த்து அ.தி.மு.க.வினர் வெகுண்டு எழுந்தால் நாடு என்ன ஆகும் என அரசு நினைத்து பார்க்க வேண்டும். அ.தி.மு.க.வினர் வீரம் மிக்கவர்கள். தி.மு.க. அரசு பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த தவறியுள்ளது. அரசின் கஜானாவை காலி செய்தது தி.மு.க. அரசு தான்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக இருப்போம், தி.மு.க. போன்று பிரச்சினை ஏற்படும்போது தொண்டர்களை கழட்டி விட மாட்டோம். தொண்டர்களை கை விடாத கட்சி அ.தி.மு.க. தான்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story