காதலி பேசாத விரக்தியில் வாலிபர் தற்கொலை
சென்னை புளியந்தோப்பு பகுதியில் காதலி பேசாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திரு.வி.க நகர்,
சென்னை புளியந்தோப்பு பெரம்பூர் பேரக்ஸ் சாலை கே.எம். கார்டன் பகுதியை சேர்ந்தவர் பீட்டர்ஜான் (வயது 27). திருமண நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் வேலை செய்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை 3 வருடமாக காதலித்து வந்ததாகவும், கடந்த ஒரு வாரமாக அந்த பெண் அவரிடம் சரியாக பேசவில்லை எனவும் கூறப்படுகிறது.
காதலி தன்னுடன் பேசாததால் விரக்தி அடைந்த பீட்டர்ஜான், நேற்று காலை வீட்டின் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story