மதுரை ஜல்லிக்கட்டு: வாடிவாசல், மைதானம் தயார்படுத்தும் பணிகள் மும்முரம்


மதுரை ஜல்லிக்கட்டு: வாடிவாசல், மைதானம் தயார்படுத்தும் பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 25 Dec 2021 8:43 PM IST (Updated: 25 Dec 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளன.

மதுரை,

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளன. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பாலமேடு மஞ்சமலை ஆறு மைதான பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. 

இதனால் மைதானம் சேதமடைந்த நிலையில் ஜே.சி.பி. இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்கள் உதவியுடன் சீர்ப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பார்வையாளர்களுக்கான கேலரி அமைக்கும் பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story