சிறுமி பாலியல் வழக்கில் மேலும் 2 பேர் கைது
சிறுமி பாலியல் வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி
சிறுமி பாலியல் வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
போக்சோ வழக்கு
புதுவை அண்ணாநகரில் உள்ள ஒரு அழகுநிலையத்தில் விபசாரம் நடப்பதாக வந்த தகவலின்பேரில் அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சிறுமி ஒருவர் விபசாரத்தில் தள்ளப்பட்ட விவரம் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அழகுநிலைய உரிமையாளர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அழகு நிலையத்தில் பணியாற்றிய சிறுமியை சீரழித்ததாக 40 பேர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது. அவர்களை கைது செய்ய உருளையன்பேட்டை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவர்களில் 10 பேர் ஏற்கனவே போலீசார் கைது செய்தனர்.
மேலும் 2 பேர் கைது
இந்தநிலையில் விழுப்புரம் கஞ்சனூரை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி திருமலை (வயது 28), சித்தன்குடியை சேர்ந்த அரவிந்த் (24) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதுவரை இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 28 பேரையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story