கிறிஸ்துமஸ் விடுமுறை; திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கிறிஸ்துமஸ் விடுமுறை; திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 25 Dec 2021 9:19 PM IST (Updated: 25 Dec 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

குமரி,

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இருந்து 5 கீலோ மீட்டர் தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் அமைந்துள்ளது திற்பரப்பு அருவி. குமரியின் குற்றாலம் என்றும் அழைக்கப்படும் திற்பரப்பு அருவி, அந்த மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இதற்கிடையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அருவியில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால், இன்றைய தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் திற்பரப்பு அருவியில் குவிந்தனர். ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்த சுற்றுலா பயணிகள், அருவியின் மேற்பகுதியில் உள்ள சுற்றலா படகுத்துறையில் படகு சவாரி செய்தனர். 

Next Story