தமிழகம் முழுவதும் 16-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது
தமிழகம் முழுவதும் 16-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்த தமிழக அரசு செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது. அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 15 மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 16-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 80.65 டோஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் 1600 இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story