ஜனவரி 3-ம் தேதி முதல் 15 - 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


ஜனவரி 3-ம் தேதி முதல் 15 - 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 26 Dec 2021 10:05 AM IST (Updated: 26 Dec 2021 10:05 AM IST)
t-max-icont-min-icon

ஜனவரி 3-ம் தேதி முதல் 15 - 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை, மடுவங்கரை பகுதியில் இன்று 16-வது மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தில் இதுவரை 8.14 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 84.87% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 55.85% பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். இந்தியாவிலேயே கர்ப்பிணிகளுக்கு அதிக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

மத்திய அரசின் உத்தரவுப்படி ஜனவரி 3-ம் தேதி முதல் 15 - 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மாநகராட்சி பள்ளியில் தொடங்கப்படும். ஜனவரி 10-ம் தேதி முதல் 9.78 லட்ச முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டோர் டோஸ் செலுத்தம் பணிகள் தொடங்கப்படும். 

15-18 வயதை சேர்ந்த சுமார் 33 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள். 60- வயதை கடந்த 1.04 கோடி பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி வாய்ந்தவர்கள்.

ஒமைக்ரான் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட மத்தியக்குழு இன்று சென்னை வர உள்ளனர். தடுப்பூசி போடுவதில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக உள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story