தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிதம்பரம் வந்த 3 பேருக்கு கொரோனா- ஒமைக்ரான் பாதிப்பா?
கடலூர் : தென் ஆப்ரிக்காவில் இருந்து சிதம்பரம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கடலூர்,
தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிதம்பரத்துக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தனர் .அவர்கள் வரும் போது சென்னை விமான நிலையத்திலேயே அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
இருப்பினும் சிதம்பரத்தில் அவர்களை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினர் கண்காணித்தனர். அதன்பிறகு மீண்டும் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .அப்போது அவர்களில் தம்பதி, ஒரு குழந்தை ஆகிய 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்தும் பரிசோதனை செய்து ஆய்வுக்காக சுகாதார துறையினர் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பிறகே அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா? என்ற விவரம் தெரியவரும் என்று சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மீரா தெரிவித்தார்.
Related Tags :
Next Story