கொமந்தான்மேடு தடுப்பணை சீரமைக்கும் பணி தொடக்கம்
மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கொமந்தான்மேடு தடுப்பணை சீரமைக்கும் பணி தொடங்கியது.
மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கொமந்தான்மேடு தடுப்பணை சீரமைக்கும் பணி தொடங்கியது.
வெள்ளப்பெருக்கு
தமிழகம், புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிந்தன. மேலும் அணைகளும் திறக்கப்பட்டதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கொமந்தான் மேடு தடுப்பணையுடன் கூடிய தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றது. வெள்ளத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தடுப்பணை உடைந்தது. இதனால் அணையின் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
சீரமைக்கும் பணி தொடக்கம்
இந்தநிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு சார்பில் தடுப்பணையை சீரமைக்கும் பணி இன்று தொடங்கியது. பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் தடுப்பணையில் சேதமடைந்த பகுதியில் மணல் கொட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவி பொறியாளர் மணிமாறன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story