டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வாசுகி பேட்டி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 Dec 2021 2:36 PM IST (Updated: 27 Dec 2021 2:36 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி கூறினார்.

கடலூர்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி  கடலூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:- 

கடலூரில் நாளை, முதல் 2 நாட்கள் கடலூர் மாவட்ட மாநாடு வடலூரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் மாநில, மாவட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் .

தமிழக அரசு சில நல்ல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆனாலும் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகிறோம் . நீட் , சமூக நல்லிணக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு தி.மு.க.வுடன் சேர்ந்து நாங்களும் போராடி வருகிறோம்.

குடிப்பழக்கம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகமாக உள்ளது. டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பெண்கள் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 

இது பற்றி மக்களிடம் தமிழக அரசு பிரசாரம் செய்ய வேண்டும். தமிழகத்தில் நிதி நிலைமையை மேம்படுத்த வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. அதற்காக தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தமிழக அரசு கால தாமதம் செய்யக் கூடாது. இவ்வாறு வாசுகி தெரிவித்தார்.


Next Story