புத்தாண்டு கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளிடம் தடுப்பூசி சான்று கேட்டு பெறவேண்டும் விடுதி நிர்வாகிகளுக்கு போலீசார் அறிவுறுத்தல்

புத்தாண்டு கொண்டாட வரும்  சுற்றுலா பயணிகளிடம் தடுப்பூசி சான்று கேட்டு பெறவேண்டும் விடுதி நிர்வாகிகளுக்கு போலீசார் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 28 Dec 2021 12:25 AM IST (Updated: 28 Dec 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரிக்கு புத்தாண்டு கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளிடம் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் கேட்டு பெறவேண்டும் என தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

புதுச்சேரி
புதுச்சேரிக்கு புத்தாண்டு கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளிடம் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் கேட்டு பெறவேண்டும் என தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முழு தளர்வுகளுடன் அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி புதுவையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கில புத்தாண்டையும் கொண்டாடிவிட்டு செல்ல திட்டமிட்டு விடுதிகளில் தங்கியுள்ளனர். இதனால் அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிகிறது. மேலும் சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

ஆலோசனை கூட்டம்

இந்தநிலையில் புதுவை சட்டம்- ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்வரன், போக்குவரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் தலைமையில் தங்கும் விடுதி உரிமையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மேலாளர்களுடன் ஆலோசனை கூட்டம்  நடந்தது.
கூட்டத்தில், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளுக்கு வரும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் தடுப்பூசி போட்டு கொண்டு உள்ளனரா? என்பதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி போடதபட்சத்தில் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று கட்டாயம் கேட்டு பெற வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.
மேலும் ஓட்டல்கள், ரிசார்ட்டுகளில் அரசின் சிறப்பு அனுமதி பெற்று புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தினால் மத்திய, மாநில அரசுகளில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Next Story