ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை; திருப்பூரில் மருத்துவமனைக்குள் செல்ல முக கவசம் கட்டாயம்
திருப்பூரில் ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முக கவசம் அணியாமல் மருத்துவமனைக்குள் யாரும் வர கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில், மருத்துவமனை வளாகத்தினுள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். காலை 8 மணி முதல் 10 மணி வரை மதியம் 12 மணி முதல் 2 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை யாரும் நிற்கவோ, உட்காரவோ அனுமதி இல்லை. வாகனம் நிறுத்த கூடாது.
குப்பை போடக்கூடாது (குப்பையை தொட்டியில் போட வேண்டும்). மது அருந்தி விட்டு உள்ளே வர அனுமதி இல்லை. எச்சில் துப்பக்கூடாது. புகைப்பிடிக்க கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்காக, நுழைவு வாசலில் செக்யூரிட்டிகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. முக கவசம் அணிந்து வருவோரை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story