சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்றுவாரிய கட்டிடம் இடிந்து விழுந்து 24 வீடுகள் தரைமட்டம்
சென்னை திருவொற்றியூரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்து 24 வீடுகள் தரைமட்டம் ஆகி விட்டன. முன்கூட்டியே மக்கள் வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
சென்னை,
சென்னை திருவொற்றியூர் கிராம தெருவில் உள்ள அரிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கடந்த 1993-ம் ஆண்டு கட்டப்பட்டு 1998-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டன. இதில் 24 வீடுகள் கொண்ட 14 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த கட்டிடங்களில் 336 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாகவே இந்த கட்டிடங்களில் லேசாக விரிசல் காணப்பட்டது. சமீபத்தில் சென்னையில் பெய்த பெருமழையால் இந்த கட்டிடங்களில் அந்த விரிசல்கள் பெரிதானது. இதையடுத்து அந்த விரிசல்களை சரிசெய்யக்கோரியும், கட்டிடங்களை புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கட்டிடங்களை புனரமைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் என குடிசை மாற்று வாரியம் சார்பிலும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மக்கள் ஓட்டம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ‘பி’ பிளாக் கட்டிடத்தில் ஒரு சில இடங்களில்திடீரென விரிசல்கள் பெரிதானது. இதனால் அங்கிருந்த மக்கள் பீதி அடைந்தனர். அதன்பின்னர் எந்த பிரச்சினையும் இல்லாமல் போகவே உறங்க சென்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை குடியிருப்பு வளாகத்தை சேர்ந்த தனியரசு என்பவர் ‘பி’ பிளாக் கட்டிடத்தை பார்த்தார். லேசான சத்தத்துடன் கட்டிடத்தின் கீழ்பகுதியில் தொடர்ந்து விரிசல் விழுவதை அவர் கவனித்தார். இதையடுத்து உடனடியாக ‘எப்பா... விரிசல் பெருசாவுது... எல்லாரும் கீழே வந்துடுங்கப்பா...’, என்று அபயக்குரல் எழுப்பினார். இதையடுத்து அந்த கட்டிடத்தில் இருந்த மக்கள் ஓட்டமும், நடையுமாக அங்கிருந்து வெளியேற தொடங்கினர். துணி துவைத்து கொண்டிருந்த பெண்கள் அந்த துணிகளை அப்படியே போட்டுவிட்டும், சமைத்து கொண்டிருந்தவர்கள் அப்படியே பொருட்களை போட்டுவிட்டும் உயிர் பிழைத்தால் போதும் என்ற ரீதியில் குழந்தைகளையும், கையில் கிடைத்த பொருட்களையும் தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பி பிளாக் அருகே இருந்த ஏ பிளாக் கட்டிடத்தில் இருந்த 24 குடும்பங்களும் அச்சம் காரணமாக வெளியேறினர்.
24 வீடுகள் தரைமட்டம்
அந்தவகையில் காலை 9.30 மணிக்கே அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். பூகம்ப நேரத்தின்போது வீடுகளை விட்டு சாலையில் நின்று வீட்டையே கவலையுடன் மக்கள் பார்ப்பதுபோல, அப்பகுதி மக்கள் அந்த பி பிளாக் குடியிருப்பை சோகமாக பார்த்து கொண்டிருந்தனர். இதனை அருகில் உள்ள கட்டிடங்களில் வசிப்போரும் கவலைகொள்ள பார்த்துகொண்டிருந்தனர். இதுகுறித்து குடிசை மாற்று வாரியத்துக்கும் தகவல் கிடைத்தது. அதிகாரிகளும் ஆய்வு மேற்கொள்ள வந்தனர்.
இந்தநிலையில் காலை 10.30 மணிக்கு யாரும் எதிர்பாராத வகையில் பி பிளாக் கட்டிடத்தில் பயங்கர சத்தம் கேட்டது. என்வென்று சுதாரிப்பதற்குள்ளாக கட்டிடம் அப்படியே சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியே மண் துகள்களால் சூழப்பட்டு புகைமூட்டம் ஆனது. இத்தனை வருடங்களாக வாழ்ந்த வீடு நொடிப்பொழுதில் சரிந்து விழுந்ததே என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு பெண்கள் அழுதனர். இந்த விபத்தில் 24 வீடுகள் தரைமட்டமாகின
வேதனையில் மக்கள்
கட்டிடம் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு, அங்குள்ள அனைவரும் குடும்பம் குடும்பமாக திரண்டனர். கட்டிட இடிபாடுகளுக்குள் துணிமணிகளும், பாத்திரங்களும் சிதறி கிடப்பதை பார்த்து மக்கள் வேதனை அடைந்தனர். பி பிளாக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏ பிளாக் கட்டிடத்தின் ஒரு பகுதி சற்று சேதம் அடைந்தது. முன்கூட்டியே மக்கள் அனைவரும் கட்டிடத்தில் இருந்து வெளியேறியதால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. கட்டிடம் இடிந்து வெகுநேரம் ஆகியும் மக்களின் அலறல் சத்தம் மட்டும் ஓயாமல் இருந்தது.
தகவல் அறிந்து தீயணைப்பு-மீட்பு பணிகள் துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். பல்வேறு நிலையங்களில் இருந்த தீயணைப்பு வீரர்களும் விரைந்தனர். அதேபோல பெருநகர சென்னை மாநகராட்சி, போலீசாரும் விரைந்தனர். உடனடியாக கட்டிடத்தை சுற்றியிருந்தவர்களை பாதுகாப்பாக நிறுத்தினர்.
மீட்பு பணி மும்முரம்
பின்னர் கட்டிடங்கள் அருகே உள்ள மரங்களை அறுவை எந்திரங்கள் மூலம் அகற்றி, பின்னர் பொக்லைன் எந்திரங்கள் மூலமாக கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்த தொடங்கினர். உயிர்சேதம் இல்லை என்று கூறப்பட்டாலும், எதிர்பாராதவிதமாக யாரும் சிக்கி இருக்கிறார்களா? பணம்-நகைகளை எடுக்கவேண்டும் என்ற ரீதியில் யாராவது உள்ளே சென்று சிக்கி உள்ளனரா? என்ற ரீதியில் மீட்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்தநிலையில் மீட்பு பணிகளை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்கள் ஆறுதல் கூறினர்.
இந்த சம்பவம் திருவொற்றியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Related Tags :
Next Story