பாலக்காடு - அந்தரத்தில் தொங்கியபடி 72-வயது பாட்டியின் சாகசம்!


பாலக்காடு - அந்தரத்தில் தொங்கியபடி 72-வயது பாட்டியின் சாகசம்!
x
தினத்தந்தி 28 Dec 2021 2:04 PM IST (Updated: 28 Dec 2021 2:04 PM IST)
t-max-icont-min-icon

அந்த பாட்டி துளியும் பயமில்லாமல் தைரியமாக சவாரி செய்துள்ளார்.

பாலக்காடு,

கேரளாவை சேர்ந்த 72 வயதான பாட்டி வின்ச் என்றழைக்கப்படும் ரோப்கார் வகை சாகசத்தில் ஈடுபட்டு காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பாலக்காடு பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் இந்த வின்ச் உள்ளது.அந்த பூங்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் பாட்டி. அங்கிருந்த வின்ச்சில் பயணம் செய்ய ஆசைப்பட்ட அந்த பாட்டி துளியும் பயமில்லாமல் தைரியமாக சவாரி செய்துள்ளார்.

சேலை அணிந்திருந்த அவர் சீட்பெல்ட் மற்றும் இருக்கையுடன் இறுக்கி பிடித்துக்கொள்ளும் பாதுகாப்பு பெல்ட்களை அணிந்த பின் பாதுகாப்பாக சவாரி செய்தார்.

“நான் பயப்படவில்லை... இதை மிகவும் விரும்பினேன்.. இது குதூகலமாக இருந்தது” என்று அவர் தெரிவித்தார்.

இந்த வீடியோ ‘யாத்திரா பிரேமிகள்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த பதிவில் தெரிவித்திருப்பதாவது,  

‘இவருடைய பெயர்  ‘பாரு அம்மா’.அவருடைய கனவுகளில் ஒன்றை நிறைவேற்ற நான் உதவினேன். பாரு அம்மாளை  மாதிரி இன்னும் நிறைய பேர் வரட்டும்.’ 

இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பல்வேறு தரப்பினரால் ரசிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 


Next Story