அழகு நிலைய சிறுமி பலாத்கார வழக்கு பட்டதாரி வாலிபர் உள்பட 2 பேர் கைது


அழகு நிலைய சிறுமி பலாத்கார வழக்கு பட்டதாரி வாலிபர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Dec 2021 11:51 PM IST (Updated: 28 Dec 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

அழகு நிலைய சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், பட்டதாரி வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி
அழகு நிலைய சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், பட்டதாரி வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போக்சோ வழக்கு

புதுவை அண்ணாநகரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் விபசாரம் நடப்பதாக வந்த தகவலின்பேரில் அங்கு உருளையன்பேட்டை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 18 வயதுக்குட்பட்ட சிறுமி விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அழகு நிலைய உரிமையாளர் மற்றும் அங்கு வந்து சென்ற வாடிக்கையாளர்கள் என 40 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் உரிமையாளர் உள்பட 12-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும் 2 பேர் கைது

இந்தநிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி கல்லையன்குப்பத்தை சேர்ந்த பட்டதாரியான லோகேஷ் (வயது 23), விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த தொழிலாளி மோகன்தாஸ் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 26 பேரையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Next Story