திருவொற்றியூரில் இடிந்து விழுந்த கட்டிடத்தை பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டார்
திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த பகுதிக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
திருவொற்றியூர்,

பின்னர் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இடிந்து விழுந்த கட்டிடம் மட்டுமின்றி சுற்றியுள்ள அனைத்து குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளும் மிக மோசமான நிலைமையில் உள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது. இங்குள்ள வீடுகளை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய குடியிருப்புகளை கட்டிக்கொடுக்கும் வரை அவர்களை வாடகை வீடுகளில் குடியமர்த்த தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இந்த கட்டிடம் இடிந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய தரமில்லாத கட்டிடங்கள், பஸ்கள் ஆகியவற்றை முன்கூட்டியே ஆய்வு செய்து மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அரசு மக்களை காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story