ஒமைக்ரான் பாதிப்பு எதிரொலி: சென்னையில் 2-வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு
ஒமைக்ரான் பாதிப்பு எதிரொலியாக சென்னை வந்த மத்திய குழுவினர் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, மருத்துவ கட்டமைப்பு குறித்தும் கேட்டறிந்தனர்.
சென்னை,
ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகமுள்ள தமிழகம், கேரளா, மராட்டியம், மேற்கு வங்காளம், மிசோரம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய குழுவினர் சென்று ஆய்வு செய்துவருகின்றனர். தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக டாக்டர் வினிதா, டாக்டர் பர்பசா, டாக்டர் எஸ்.சந்தோஷ்குமார், டாக்டர் தினேஷ்பாபு உள்ளிட்ட 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் கடந்த 26-ந்தேதி இரவு சென்னை வந்தனர்.
முதல் நாளான நேற்று முன்தினம் சென்னை விமான நிலையம், கிண்டி கிங்ஸ் ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்த மத்திய குழுவினர், அதை தொடர்ந்து தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
2-வது நாளாக...
அப்போது, தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், சிகிச்சைகள், ஆக்சிஜன் வசதி, தடுப்பூசியின் இருப்பு மற்றும் மருத்துவ கட்டமைப்பு குறித்து குழுவினர் கேட்டறிந்தனர். மேலும், டி.எம்.எஸ். வளாகத்தில் ரூ.4 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மரபணு ஆய்வகத்தில் ஒமைக்ரான் பரிசோதனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றும், செங்கல்பட்டு மற்றும் குன்னூரில் உள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் எனவும் மத்திய குழுவினரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், 2-வது நாளான நேற்று வளசரவாக்கம் கற்பகாம்பாள் நகருக்கு சென்று தமிழகத்தில் முதலாவதாக ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நைஜீரியாவில் இருந்து வந்தவரின் வீடு மற்றும் அருகில் உள்ள இடங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் ஆய்வு
பின்னர், மாலை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அங்கு டவர்-3 கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை வார்டுகளை பார்வையிட்ட குழுவினர், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், ஆக்சிஜன் வசதி, ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ கட்டமைப்பு குறித்து ஆஸ்பத்திரி டீன் டாக்டர் தேரணிராஜனிடம் கேட்டறிந்தனர். மேலும், 2-வது அலையின்போது நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அதை கையாண்ட விதம் குறித்தும், தற்போது ஏற்பட்டுள்ள ஒமைக்ரான் பாதிப்பை கையாளும் விதம் குறித்தும் டீன் தேரணிராஜனிடம் மத்திய குழுவினர் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, 3-வது நாளான இன்று (29-ந்தேதி) சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திக்கு சென்று ஆய்வு செய்ய மத்திய குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் குழுவினர் சமர்ப்பிக்க உள்ளனர்.

Related Tags :
Next Story