கோவை தனியார் கல்லூரிக்குள் புகுந்த சிறுத்தைப்புலி - வீடியோ
கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் புகுந்து சிறுத்தைப்புலி 2 நாய்களை அடித்து கொன்றது.
கோவை,
கோவையை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி ஒன்று சுற்றித் திரிந்து வருகிறது. இதனை பிடிப்பதற்காக கோவைப்புதூர் பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு இருந்தது. இருந்த போதிலும் அந்த சிறுத்தைப்புலி கூண்டுக்குள் சிக்காமல் வனத்துறையினருக்கு தண்ணி காட்டி வருகிறது.
இந்தநிலையில் அந்த சிறுத்தை புலி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்திற்குள் சென்று அங்கு கட்டிப் போட்டிருந்த 2 நாய்களை அடித்து கொன்று உள்ளது.
அந்த சிறுத்தை புலிகல்லூரி வளாகத்துக்குள் செல்வதும், அங்கிருந்த படிக்கட்டுகளில் லாவகமாக இறங்குவதும், அங்கு காயப்போட்டிருந்த துணியை முகர்ந்து பார்ப்பதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
கோவை : தனியார் கல்லூரிக்குள் புகுந்து 2 நாய்களை கொன்ற சிறுத்தை..!#kovai#School#Private#Cheetah#Dog#CCTV#viralvideo#trending#Dailythanthi#dtpic.twitter.com/GVKLOKmk6x
— DailyThanthi (@dinathanthi) December 29, 2021
Related Tags :
Next Story