மதுபான குடோன்களில் கலால் துறையினர் அதிரடி சோதனை வருமான இழப்பு ஏற்படுத்தினால் உரிமம் ரத்து
மதுபான குடோன்களில் கலால் துறையினர் அதிரடி சோதனை நடத்தினார். அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று துணை ஆணையர் சுதாகர் எச்சரித்தார்.
புதுச்சேரி
மதுபான குடோன்களில் கலால் துறையினர் அதிரடி சோதனை நடத்தினார். அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று துணை ஆணையர் சுதாகர் எச்சரித்தார்.
போலி மதுபானம்
புதுவையில் போலி மதுபான தயாரிப்பு மற்றும் மதுபானங்களுக்கு போலியான ஹேலோகிராம் ஸ்டிக்கர்கள் ஒட்டி மோசடி நடந்தது. தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி அதிக அளவில் மதுபான விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் போலி மதுபானங்கள் நுழையாத வண்ணம் கலால்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி துணை ஆணையர் சுதாகர் தலைமையில் நேற்று மதுபான குடோன்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
ஹேலோகிராம்கள்
அப்போது மதுபான கொள்முதல், விற்பனை, கையிருப்பு குறித்து அவர்கள் சரிபார்த்தனர். மேலும் மதுபாட்டில்களில் ஒட்டப்பட்டுள்ள ஹேலோகிராம்கள் ஸ்டிக்கர்கள் ஒரிஜினல்தானா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து கலால்துறை துணை ஆணையர் சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் மதுபானங்கள் முன்கூட்டியே கலால் வரி கட்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் மதுபானங்களுக்கு இந்த முறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உரிமம் ரத்து
கலால்துறை அனுமதியின்படி மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா? மதுபாட்டில்களில் ஒட்டப்பட்டுள்ள ஹேலோகிராம்கள் ஒரிஜினலா? என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட்டால் மதுபானக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story