ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் 150 இடங்களில் இலவச யோகா பயிற்சி
தமிழகம் முழுவதும் ஈஷா அறக்கட்டளை சார்பில் இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் ஈஷா அறக்கட்டளை சார்பில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் அனைவருக்கும் இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற உள்ளது. ஈஷா தன்னார்வலர்கள் இவ்வகுப்பை நேரில் நடத்த உள்ளனர்.
இவ்வகுப்பில் ‘சூரிய சக்தி’ என்ற எளிய சக்தி வாய்ந்த யோக பயிற்சி கற்றுக்கொடுக்கப்படும். இந்த வகுப்புகள் ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் காலை 6.30 மணி முதல் காலை 8.15 மணி, நண்பகல் 11.30 மணி முதல் 1.15 மணி, மாலை 5.30 மணி முதல் 7.15 மணி என 3 வேளைகளில் நடக்கும். இதில் ஏதேனும் ஒரு நாள் ஒரு நேரத்தை பங்கேற்பாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
இலவசமாக கற்றுக்கொடுக்கப்படும் இப்பயிற்சியில் 7 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் நடக்கும் இவ்வகுப்பில் பங்கேற்க Isha.co/SSRD என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம். முன்பதிவுக்கு உதவி தேவைப்பட்டால் 83000 99555 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story