தாய்-தந்தையருக்கு கோவில் கட்டி சிலை... கெடா விருந்து வைத்து விழா...!
உடுமலை அருகே தாய் தந்தையர் இருவருக்கும் சிலை வடித்து விழா எடுத்து அமர்க்களப்படுத்தி உள்ளார் ரமேஷ்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை தீபாலபட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய தந்தை விவசாயி மாரிமுத்து. தாய் பாக்கியம். இவர்கள் இருவரும் இறந்து பத்து ஆண்டுகள் ஆகிறது. இந் நிலையில் தாய் தந்தையர் இருவருக்கும் சிலை வடித்து விழா எடுத்து அமர்க்களப் படுத்தி உள்ளார் ரமேஷ்.
விழாவில் சிறப்பு பூஜைகள் நடத்தி தீபாலபட்டி ஊர் மக்களை அழைத்து கெடா விருந்து வைத்துள்ளார். வயதான பெற்றோர்களை ஒதுக்கி வைக்கும் இந்த காலத்தில் தாய் தந்தையருக்கு விழா எடுத்து கெடா வெட்டு நடத்தி சுற்று வட்டார மக்களை ஆச்சரியத்தில் அசத்தியுள்ளார் ரமேஷ். இந்த செய்தி வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story