எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது ; எழுத்தாளர் முருகேசுக்கு பால புரஸ்கர் விருது


எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது ; எழுத்தாளர் முருகேசுக்கு பால புரஸ்கர் விருது
x
தினத்தந்தி 30 Dec 2021 3:56 PM IST (Updated: 30 Dec 2021 4:53 PM IST)
t-max-icont-min-icon

சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் சாகித்திய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

எழுத்தாளர் அம்பைக்கு 2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

"சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை" என்ற சிறுகதை தொகுப்புக்காக பெண் எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. 

வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை, சக்கர நாற்காலி, பயணப்படாத பாதைகள் உள்ளிட்ட நூல்களையும் அம்பை எழுதியுள்ளார்.

எழுத்தாளர் முருகேசுக்கு பால புரஸ்கர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.  "அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை" என்ற கதை தொகுப்புக்காக எழுத்தாளர் முருகேசுக்கு பால புரஸ்கர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story