நேற்று போல் இன்று கனமழை பெய்யுமா? வானிலை ஆய்வு மையம் தகவல்
வருகிற 3ஆம் தேதி ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் அனேக இடங்களில் மிதமான மழையும் , உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.
வருகிற 3ஆம் தேதி ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் , உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில் வடகிழக்கு பருவக்காற்று காரணமாகவும், வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் அதன் பிறகு மழை குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 59% அதிக மழை பெய்துள்ளது. சென்னையில் இயல்பான மழை அளவில் 78 செ.மீ பெய்த மழை அளவு 136 செ.மீ. 74% அதிக மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 119% அதிக மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story