சென்னையில் பலத்த காற்றுடன் மீண்டும் மழை
சென்னையில் பலத்த காற்றுடன் மீண்டும் மழை பெய்து வருகிறது.
சென்னை,
சென்னையில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பருவமழை வெளுத்து வாங்கியது.
இம்மாதம் ஆரம்பத்தில் இருந்து மழை குறைவாகவே இருந்து வந்தது. பகலில் வெயிலின் தாக்கமும், நள்ளிரவு முதல் அதிகாலை வரை பனியின் தாக்கமுமாக இருந்தது. இந்த நிலையில், வெகு நாட்களுக்கு பிறகு, சென்னையில் நேற்று பல இடங்களில் திடீரென்று மழை பெய்தது.
சென்னையில் பெய்த திடீர் மழையால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய, 1,000 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பலத்த காற்றுடன் மீண்டும் மழை பெய்து வருகிறது.
எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, மேற்கு மாம்பலம், கோயம்பேடு, பள்ளிக்கரணை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், மேடவாக்கம். தாம்பரம் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்து வருகிறது.
Related Tags :
Next Story