விரைவில் நிலைமை சீரடையும் - மு.க.ஸ்டாலின் டுவீட்!
சீரமைப்புப் பணிகளை நானும் நேரடியாகவே ஆய்வு செய்து கண்காணித்து வருகிறேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை ஆழ்வார்பேட்டை, ஜி.என்.செட்டி சாலை ஆகிய மாநகரின் சில முக்கிய இடங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் நடந்துவரும் சீரமைப்புப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது நேரில் சென்று களஆய்வு செய்தார்.
இந்நிலையில், அவர் டுவிட்டர் பதிவில்,
நேற்று மட்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எதிர்பாராத கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய ஒவ்வொரு அதிகாரியும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
சீரமைப்புப் பணிகளை நானும் நேரடியாகவே ஆய்வு செய்து கண்காணித்து வருகிறேன். விரைவில் நிலைமை சீரடையும் என பதிவிட்டுள்ளார்.
நேற்று மட்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எதிர்பாராத கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய ஒவ்வொரு அதிகாரியும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். pic.twitter.com/pi00tdt873
— M.K.Stalin (@mkstalin) December 31, 2021
Related Tags :
Next Story