புத்தாண்டை கொண்டாட புதுச்சேரி வந்த சுற்றுலா பயணிகள் தவிப்பு
புதுவையில் புத்தாண்டை கொண்டாட வந்த சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.
புதுச்சேரி
புதுவையில் புத்தாண்டை கொண்டாட வந்த சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டம்
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இருந்து புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
ஓட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்து கொண்டு பலர் வந்துள்ளனர். அதேநேரத்தில் பலர் அறை கிடைக்காத நிலையிலும் புதுவைக்கு வந்துள்ளனர்.
அவதி
அவர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துவிட்டு இரவில் தங்கள் கார்களிலேயே ஓய்வெடுத்தனர். வெளிமாநிலத்தவர் பல்லாயிரக்கணக்கில் குவிந்துள்ளதால் சாப்பாட்டுக்காக ஓட்டல்களில் கூட்டம் அலைமோதியது.
தாங்கள் விரும்பிய உணவு கிடைக்காதபோதிலும் கிடைத்த உணவினை நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்று சாப்பிட்டனர். மேலும் மழை பெய்துகொண்டே இருந்ததால் அதற்கு ஒதுங்கக்கூட சரியான இடம் கிடைக்காமல் அவதியடைந்தனர்.
நகரமெங்கும் வௌமாநில கார்கள் அதிகளவில் வலம் வந்தன. கார்களை நிறுத்துவது எங்கு என்று தெரியாமல் பலர் திண்டாடி வந்தனர். சிலர் போக்குவரத்து நெசலில் சிக்கி அவதியடைந்தனர்.
Related Tags :
Next Story