மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட்- கமல்ஹாசன்


மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட்- கமல்ஹாசன்
x
தினத்தந்தி 1 Feb 2022 5:54 PM IST (Updated: 1 Feb 2022 5:54 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 2-வது முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு, வருமான வரி உச்ச வரம்பு, நெடுஞ்சாலை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

“மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத இது. 

பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைமக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story