கள்ளக்காதலியை வீட்டுக்கு அழைத்து வந்து மகள் கண் முன்னே உல்லாசம்- தந்தை கைது


கள்ளக்காதலியை வீட்டுக்கு அழைத்து வந்து மகள் கண் முன்னே உல்லாசம்-  தந்தை கைது
x

காட்பாடி பிரமபுரத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்திரவதை செய்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரம் டோபி கானா தெருவை சேர்ந்தவர் குமரன் (வயது37). மெக்கானிக் வேலை செய்து வந்தார். மேலும் திருட்டிலும், கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்தார்.

இவர் மீது சென்னை அம்பத்தூர், காஞ்சிபுரம் ரத்தினகிரி, வாலாஜா, வேலூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 14-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இவரது மனைவி செல்வி பேபி. இத்தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். செல்வி பேபிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதில் அவர் இறந்துவிட்டார்.

இதனை தொடர்ந்து அவரது 6 வயது மகள் வாலாஜா அடுத்த மேல குப்பத்தில் உள்ள அவரது தாத்தா பாதுகாப்பில் இருந்தார். குமரனும் அங்கேயே தங்கியிருந்தார்.

அப்போது குமரனின் நடவடிக்கை சரியில்லாததால் அவரது மாமனாருடன் தகராறு ஏற்பட்டது. குமரன் அவரது மகளை அழைத்துக்கொண்டு காட்பாடி பிரம்மபுரம் டோபிக்கானா தெருவில் குடியேறினார்.

அங்கு வைத்து மகள் என்றும் கூட பாராமல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும் பக்கத்து வீட்டிலும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பழைய காட்பாடி ரோட்டில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.

அடிக்கடி கஞ்சா போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். மேலும் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சிறுமி முன்பாகவே அவர் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

மேலும் மகளிடமும் அத்துமீறுல் தொடர்ந்தது. இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது எனக் கூறி சிறுமியை பலமுறை அடித்துத் தாக்கி உள்ளார். அடிக்கடி கள்ளக்காதலியை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு குமரனின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. மனைவி இல்லாத இவரது வீட்டிற்கு அடிக்கடி ஒரு பெண் வந்து போவதை அவர் கவனித்தார். இதுபற்றி குமரனின் மகளை தனியாக அழைத்து விசாரித்தார்.

அப்போது சிறுமி எனது தந்தை வீட்டுக்கு பெண் ஒருவரை அழைத்து வருவார். இருவரும் துணி இல்லாமல் ஒன்றாக இருப்பார்கள்.

தந்தை என்னிடமும் தவறாக நடந்து கொள்வார். இதுபற்றி வெளியே சொன்னால் என்னை அடிப்பார். என்னை எனது தாத்தா வீட்டில் கொண்டு போய் விடுங்கள் என கூறி கதறி அழுதார்.

அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் காஞ்சனா மற்றும் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இதில் குமரன் அவரது கள்ளக்காதலியை வீட்டிற்கு அடிக்கடி அழைத்து வந்ததும், சிறுமியிடம் அத்து மீறியதும் தெரியவந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குமரனை கைது செய்தனர். அவரை வேலூர் ஜெயிலில் அடைத்தனர். 6 வயது சிறுமியை வாலாஜாவில் உள்ள அவரது தாத்தா வீட்டில் ஒப்படைத்தனர்.

கஞ்சா போதையில் மகள் என்று கூட பாராமல் அத்துமீறல் நடந்துள்ளது.

பெண் குழந்தைகளை அடிக்கடி கவனித்து கொள்ள வேண்டும். எங்கேயும் தனிமையில் அனுப்பக்கூடாது. அவர்களுடைய நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். ஏதேனும் தவறு நடக்காமல் தற்காத்துக் கொள்ள வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story