நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு...!


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு...!
x
தினத்தந்தி 1 Feb 2022 11:18 PM IST (Updated: 1 Feb 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

சென்னை, 

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

மொத்தம் 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப வரும் பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.இதனிடையே நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டில் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுக, பாமக, பாஜக, அமமுக, தேமுதிக, மநீம மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்துக் களமிறங்குகின்றன. 

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு (அமமுக) குக்கர் சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. 

Next Story