தை அமாவாசையை முன்னிட்டு புதுவை கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தை அமாவாசையை முன்னிட்டு புதுவை கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 1 Feb 2022 11:45 PM IST (Updated: 1 Feb 2022 11:45 PM IST)
t-max-icont-min-icon

தை அமாவாசையை முன்னிட்டு புதுவை கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி
தை அமாவாசையை முன்னிட்டு புதுவை கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தை அமாவாசை

தை அமாவாசையொட்டி நேற்று முன்தினம் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பெரும்பாலானவர்கள் புதுச்சேரி கடற்கரையில் தர்ப்பணம் (திதி) கொடுத்தனர்.
இந்தநிலையில் நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சி புதுவை கடற்கரையில் நடந்தது. இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் புதுவை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து உற்சவ சாமி சிலைகள் கொண்டு வரப்பட்டன.

தீர்த்தவாரி நிகழ்ச்சி

புதுவை மணக்குள விநாயகர், தண்டு முத்து மாரியம்மன், கவுசிக பாலசுப்ரமணியர், லாஸ்பேட்டை சுப்ரமணியர் சாமி கோவில் உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. இந்த சாமி சிலைகள் புதுவை கடற்கரை காந்தி சிலை அருகே வைத்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்ததும் உற்சவ மூர்த்திகள் கோவில்களுக்கு திரும்பியது. தீர்த்தவாரியை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

Next Story