திருச்சியில் சாலை விபத்து; 2 பெண்கள் பலி


திருச்சியில் சாலை விபத்து; 2 பெண்கள் பலி
x
தினத்தந்தி 2 Feb 2022 4:54 AM IST (Updated: 2 Feb 2022 4:54 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.



திருச்சி,


புதுக்கோட்டை மாவட்டம், குளத்துார் அருகே, கல்லுக்குழிபட்டியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரை சென்றனர். கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்திய அவர்கள், நேற்று முன்தினம் இரவு அர்ஜுன் என்பவருக்கு சொந்தமான டாடா ஏஸ் வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பினர்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மண்ணச்சநல்லுார் அருகே, ஈச்சம்பட்டியை சேர்ந்த முகமது உசேன் (வயது 39) என்பவர் ஓட்டி வந்த கார், டாடா ஏஸ் வாகனத்தின் பின்னால் மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த டாடா ஏஸ் வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 6 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அவர்களில் சாந்தி (வயது 37), வசந்தி (வயது 47) ஆகியோர் வழியிலேயே இறந்தனர்.  இதுபற்றி காரை ஓட்டி வந்த முகமது உசேனிடம் கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story