நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு
x
தினத்தந்தி 2 Feb 2022 12:24 PM IST (Updated: 2 Feb 2022 12:24 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் அமல்படுத்தி வருகிறது.

அதன் ஒருபகுதியாக, மத்திய, மாநில அரசுகளின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை முகவர்கள் வைத்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தரப்பில் முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அந்த அடையாள அட்டையில் புகைப்படம் இருக்காது.

இதனால், வாக்குச்சாவடி முகவர்கள் மத்திய, மாநில அரசு வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.  புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வைத்திருந்தால் மட்டுமே போலீசார் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் முகவர்களை வாக்குச்சாவடி மையத்திற்குள் அனுமதிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றக்கூடிய அரசியல் கட்சி முகவர்கள் அனைவரும் மத்திய, மாநில அரசு வழங்கக்கூடிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story