மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் இறுதி தரவரிசை பட்டியல்
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு அரசு, நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இறுதி தரவரிசை பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை சென்டாக் இணையதளத்தில் (www.centacpuducherry.in) பார்வையிடலாம். இதுதொடர்பாக மாணவர்களுக்கும் குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.
ஜிப்மர் மாணவர் சேர்க்கை தாமதம்
ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசின் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ். இடங்களை மருத்துவ கலந்தாய்வு கமிட்டி நிரப்புகிறது. இதற்கான ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் நேற்று முதல் கல்லூரிகளில் சேரலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி ஜிப்மரில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவ, மாணவிகள் நேற்று சேர்க்கைக்காக ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு வந்தனர். ஆனால் நிர்வாக காரணங்களுக்காக நேற்று சேர்க்கை நடைபெறவில்லை. இன்று (வியாழக்கிழமை) சேர்க்கைக்கு வருமாறு நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் ஏமாற்றத்துடன் சென்றனர்.
Related Tags :
Next Story